செய்திகள் :

90-களின் நாஸ்டால்ஜியாவை ஞாபகப்படுத்த பேட்டரி சுவையில் சிப்ஸ் அறிமுகம் - எப்படி இருக்கும்?

post image

வித்தியாசமான உணவு அனுபவங்களைத் தேடும் உணவு ஆர்வலர்களுக்காகவே ரிவைண்ட் (Rewind) என்ற பிராண்ட், 9-வோல்ட் பேட்டரி சுவையில் சிப்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிப்ஸ் பேட்டரியை நாக்கால் தொடும்போது ஏற்படும் கூச்ச உணர்வை அனுபவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி சுவை சிப்ஸ், முற்றிலும் பாதுகாப்பான மற்றும் உண்ணக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் உண்மையான பேட்டரி கூறுகள் எதுவும் இல்லை என்பதையும் ரிவைண்ட் பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சிப்ஸில் சிட்ரிக் அமிலம், சோடியம் பைக்கார்பனேட் மற்றும் கனிம உப்புகளின் கலவை பயன்படுத்தப்பட்டு, உலோக சுவை மற்றும் நாக்கில் லேசான கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“இது ஒரு வித்தியாசமான சவாலாக இருந்தது. நாக்கில் கூச்ச உணர்வை ஏற்படுத்தும் ஒரு சுவையை உருவாக்குவதே எங்கள் நோக்கமாக இருந்தது” என்கிறார் இந்த சுவையை உருவாக்கிய செஃப் மற்றும் சுவை நிபுணரான மத்தியாஸ் லார்சன்.

ரிவைண்ட் பிராண்ட், நாஸ்டால்ஜியாவை மையப்படுத்தி இந்த சிப்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.

90 காலகட்டங்களில் பலர் பேட்டரியை நாக்கால் தொட்டு பார்த்து அனுபவம் பெற்றிருப்பார்கள், மீண்டும் அதனை உயிர்ப்பிக்கும் வகையில் இந்த சிப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சிப்ஸ் நெதர்லாந்தில் உள்ள ஏஎச், ஜம்போ, பிளஸ், ஹூக்விளீட் மற்றும் பிக்னிக் போன்ற கடைகளில் €1.89 (தோராயமாக ₹200) விலையில் கிடைக்கிறது. விரைவில் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

`அனுமதியின்றி என்னைத் தொட்டார்' - நடிகை அஞ்சலி ராகவ்; மன்னிப்பு கேட்ட போஜ்புரி நடிகர்

போஜ்புரி படங்களில் நடித்து வருபவர் நடிகர் பவன் சிங். இவரும் அஞ்சலி ராகவ்வும் நடித்த பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் பவன் சிங் தனது அனுமதி இல... மேலும் பார்க்க

எலான் மஸ்க்குடன் பெங்களூரு தொழில்முனைவோர் எடுத்த செல்ஃபி... இவ்வளவு கவனம் பெறுவது ஏன் தெரியுமா?

பெங்களூருவைச் சேர்ந்த தொழில்முனைவோர் தீபக் கணகராஜு, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் உடன் செல்ஃபி எடுத்ததாக ஒரு புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டார். முதலில் இது ஒரு சாதாரண சந்திப்ப... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர்: பாக் தீவிரவாதிகள் 100 தடவைக்கும் மேல் ஊடுருவ உதவிய `GPS' தீவிரவாதி சுட்டுக் கொலை

தீவிரவாதிகள் ஊடுருவல் ஜம்மு காஷ்மீரில் கடும் குளிர்காலத்தைத் தவிர்த்து, மற்ற காலங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இந்திய எல்லைக்குட்பட்ட காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் தொடர்ந்து ஊடுருவ முய... மேலும் பார்க்க

காதலியை கைவிட்ட காதலன்; தற்கொலையை தடுத்து நிறுத்தியவரை மணந்த பெண் - டெஸ்ட் வைக்கும் தந்தை!

காதல் கோட்டை படத்தில் நடிகை தேவயானி தனது காதலனை தேடி வீட்டை விட்டு புறப்பட்டது போன்று நிஜத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ஸ்ரத்தா திவாரி என்ற இளம்பெண் சர்தக் எ... மேலும் பார்க்க

UP: "மனைவியின் தங்கையைத் திருமணம் செய்து வைங்க" - மின்கோபுரத்தில் ஏறிய நபர்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்தில் ராஜ் சக்சேனா என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு பெண்ணை முதலில் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், திருமணமாகி ஒரு வருடத்தில் அவரது மனைவி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாகக் கூறப்படுகி... மேலும் பார்க்க

சீனா: "மன அழுத்தைப் போக்கவே இதைச் செய்தேன்" - பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து ரத்தத்தைத் திருடிய நபர்

சீனாவைச் சேர்ந்த லி என்பவர் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, ரத்தம் எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி... மேலும் பார்க்க