50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்க செய்த விமானப் படை!
ஜம்மு காஷ்மீர்: பாக் தீவிரவாதிகள் 100 தடவைக்கும் மேல் ஊடுருவ உதவிய `GPS' தீவிரவாதி சுட்டுக் கொலை
தீவிரவாதிகள் ஊடுருவல்
ஜம்மு காஷ்மீரில் கடும் குளிர்காலத்தைத் தவிர்த்து, மற்ற காலங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இந்திய எல்லைக்குட்பட்ட காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் தொடர்ந்து ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர்.
எல்லையில் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினர் அவர்களை இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர்.

இந்திய எல்லையில் எங்கு பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என்பதை கண்காணித்து, அதை தீவிரவாத அமைப்புகளுக்கு தெரிவிக்கக்கூடிய தீவிரவாதிகள் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு தீவிரவாதிதான் பாகுகான்.
காஷ்மீரின் குரேஸ் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு கடந்த பல ஆண்டுகளாக இவன் உதவி செய்து வந்தான்.
பாகுகான் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் தீவிரவாதக் குழுக்கள் ஊடுருவல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். அந்த ஊடுருவல்கள் பலமுறை வெற்றிகரமாகவும் அமைந்துள்ளன.
எனவேதான் பாகுகானை “மனித ஜி.பி.எஸ்.” என்று பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்கள் அழைத்தன. 1995 ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து செயல்பட்ட பாகுகான், கடந்த 30 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட இந்திய ஊடுருவல்களுக்கு தேவையான தகவல்களை வழங்கி, தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்து வந்தான்.

அவனை இந்திய ராணுவம் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருந்தது. ஹிஜ்புல் தீவிரவாத அமைப்பின் கமாண்டரான பாகுகான், ஊடுருவல்களை திட்டமிட்டு வெற்றிகரமாக செய்து முடிக்கக்கூடியவன் என்பதால் அவன் மீது அனைத்து தீவிரவாத அமைப்புகளும் தனிப்பட்ட மரியாதை வைத்திருந்தன.
காஷ்மீரின் பந்திபோரா மாவட்ட குரேஸ் பிராந்தியத்தில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பாகுகான் உட்பட இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகுகான் கொலை செய்யப்பட்டது தீவிரவாத அமைப்புகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.