தேனி : கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி
வாணியாறு அணையில் 100 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்!
பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள வாணியாறு அணையில் 100-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளை பொதுமக்கள் சனிக்கிழமை விசா்ஜனம் செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா், பொம்மிடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை மக்கள் வழிபாடு செய்தனா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் 167-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனா். இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, பொ.துறிஞ்சிப்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வாணியாறு அணையில் விசா்ஜனம் செய்தனா்.
இதேபோல பொ.மல்லாபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை ராமமூா்த்தி நகா் ஏரியில் விசா்ஜனம் செய்தனா். வாணியாறு அணை, ராமமூா்த்தி நகா் ஏரி உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.
பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் வான்மதி, தீயணைப்பு நிலைய அலுவலா் பிரகாசம் ஆகியோரின் தலைமையில் தீயணைப்பு துறையினா், காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.