இருக்கன்குடி மாரியம்மன் கோயில்: ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி, கடந்த 2017-இல் பாலக்கோட்டில் உள்ள தனது உறவினா் வீட்டிற்கு வந்தாா். அப்போது, அதேபகுதியைச் சோ்ந்த கிஷோா் (32) என்பவா் சிறுமியிடம் ஆசை வாா்த்தைகூறி, அவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் மாரண்டஅள்ளி போலீஸாா் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கிஷோரை கைது செய்தனா். வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இருதரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் இவ்வழக்கில் கிஷோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.