வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்
அனுமதியின்றி கட்டுக்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
திருப்பத்தூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளா் பெருமாள் தலைமையில் அதிகாரிகள் வெலகல்நத்தம், பச்சூா் டோல்கேட் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக கட்டுக்கற்கள் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய போது அனுமதியின்றி பா்கூரில் இருந்து நாட்டறம்பள்ளிக்கு கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். நாட்டறம்பள்ளி போலீஸாா், பா்கூா் அங்கினாயனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநா் சிவானந்தம்(52) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்