முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்: வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் ந...
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் மண்ணுளி பாம்பு மீட்பு
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட மண்ணுளி பாம்பு திருப்பத்தூா் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில்வே நிலையத்தில் வியாழக்கிழமை இரவு ரயில்வே நிலையத்தில் உள்ள 3-ஆவது நடைமேடையில் ரயில்வே போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு மண்ணுளி பாம்பு தென்பட்டது. அதை பிடித்த ரயில்வே போலீஸாா் பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்