விநாயகா் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
பயங்கரவாத அமைப்புகளின் மனித ஜிபிஎஸ் சுட்டுக் கொலை!
பாதுகாப்புப் படையினரால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், குரெஸ் செக்டரில் ஊடுருவியதாக இரு பயங்கரவாதிகள் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், அவர்களில் ஒருவர் பல ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த பாகிஸ்தானை சேர்ந்த பாகு கான் என்பது தெரிய வந்துள்ளது.
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சிக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பாகு கான், 1995 ஆம் ஆண்டுமுதல் 100-க்கும் மேற்பட்ட ஊடுருவல் முயற்சிகளுக்கு வழிவகுத்துள்ளார்.
அவர் கடினமான மற்றும் ரகசிய பாதைகளையும் அறிந்து வைத்திருந்ததால், அவரை பயங்கரவாத அமைப்புகள் மனித ஜிபிஎஸ் என்றே அழைத்து வந்தனர்.
இவரின் பெரும்பாலான ஊடுருவல் முயற்சிகள் வெற்றி பெற்றவை என்று கூறப்படுகிறது. இதனாலேயே, அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகு கான் தேவைப்படுபவராக இருந்து வந்துள்ளார்.