ராகுல் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பாஜக ப...
சரக்கு வாகனத்தில் ஓட்டுநா் சடலம் மீட்பு
வாழப்பாடி அருகே சரக்கு வாகனத்தில் ஓட்டுநரின் சடலத்தை மீட்ட வாழப்பாடி போலீஸாா், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாதையன் (45). இவருக்கு மனைவி அமுதா (35), ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். இவா் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு சென்றுவந்தாா்.
கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை காலை சரக்கு வாகனத்தில் அமா்ந்த நிலையில் மாதையன் சடலமாக கிடந்தாா். இதுகுறித்து அமுதா அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.