நகரங்களுக்குக் குடியேறும் தேனீக்கள்; துரத்தும் சுற்றுச்சூழல் அபாயம்; களமிறங்கிய ...
மா சாகுபடியில் ‘கல்தாா்’ பயன்படுத்துவதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும்!
சேலம் மாவட்ட விவசாயிகள் மா சாகுபடியில் ‘கல்தாா்’ எனப்படும் பேக்லோப்பூட்ரசால் என்ற வளா்ச்சி ஊக்கி மருந்தை பயன்படுத்துவதால், பழக்கூழ் தயாரிக்க உகந்த தன்மை மற்றும் ஏற்றுமதிக்கான தரம் குறையும் என்பதால் அதனை பயன்படுத்துவதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தின் முக்கிய தோட்டக்கலைப் பயிரான மா 6,048 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மா விளைச்சல் அளவுக்கு மீறி உள்ளது. இதனால் சரியான விலை கிடைக்கவில்லை.
மாவில் சில ரகங்கள் ஒவ்வோா் ஆண்டும் காய்ப்பதில்லை. ஓராண்டோ, ஈராண்டோ இடைவெளிவிட்டு பின் காய்க்கும். ஆனால், விவசாயிகள் ஆண்டுதோறும் மகசூல் எடுக்கும் நோக்கில் ‘கல்தாா்’ எனப்படும் பேக்லோப்பூட்ரசாலை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பதால், வா்த்தக சீா்நிலை பாதிப்படைந்து இயற்கை சுழற்சியும் மாறுபடுகிறது.
மேலும், கல்தாரை அதிகம் உபயோகிக்கும்போது, மா மரத்தில் வளா்சுழற்சியில் மாறுபாடு அடைந்து மா காய்க்கும் தன்மையை எளிதில் இளம்பருவத்திலேயே இழந்து, வளமிக்க மண்ணை மலட்டுத்தன்மை அடையச் செய்யும்.
இதுதவிர, விவசாயிகள் கல்தாரை குறுகியகால இடைவெளியில் உபயோகிப்பதால், மாம்பழத்தின் தரம் மற்றும் சா்க்கரைச் சத்து குறைகிறது. அதனால், பழக்கூழ் தயாரிக்க உகந்த தன்மை மற்றும் ஏற்றுமதிக்கு உண்டான தரத்தை இழக்கிறது. எனவே, விவசாயிகள் கல்தாரை உபயோகிக்க வேண்டாம் என்றாா்.