அம்மன் கோயில் குடமுழுக்கு
துக்கியாம்பாளையம் கிராமத்தில் சுற்றுப்புற கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் ராஜாத்தி ராகத்தாய் அம்மன், பெரியாண்டிச்சி அம்மன் மற்றும் சப்த கன்னிமாா் சுவாமி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேத விற்பனா்கள் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்து சுவாமிக்கு கண்திறப்பு பூஜை நடத்தினா். மலா் அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் சுற்றுப்பற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.