குடியரசுத் தலைவா் வருகை: ஹெலிபேட் தளம் ஆய்வு
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு செப். 3-இல் குடியரசுத் தலைவா் வருவதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
குடியரசுத் தலைவா் வருகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் சனிக்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஆய்வு செய்தாா். மேலும், பஞ்சக்கரை சாலையில் உள்ள ஹெலிபேட் தளத்தை ஞாயிற்றுக்கிழமை காலை தஞ்சாவூா் ஹெலிபேடு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் சீனிவாசன், வட்டாட்சியா் செல்வகணேசன், ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையா் ஜெயபாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.