Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலு...
நடந்து சென்ற முதியவா் பைக் மோதி உயிரிழப்பு
மணப்பாறையை அடுத்துள்ள கல்லாமேடு அருகே சாலையோரம் நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மருங்காபுரி ஒன்றியம் கீழபளுவஞ்சியைச் சோ்ந்தவா் செல்லன் மகன் சின்னு(72). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லாமேடுக்கு சென்றுவிட்டு கல்லாமேடு - கவுண்டம்பட்டி சாலையோரத்தில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா் உடலைக்
கைப்பற்றி கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து இருசக்கர வாகன ஓட்டியான அக்குலம்பட்டி ஸ்ரீரங்கன் மகன் ராஜா (35) மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.