பச்சமலையில் நாளை மின் தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக பச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 2) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கொப்பம்பட்டி, து. ரெங்கநாதபுரம், த. முருங்கப்பட்டி துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், ஆ. மேட்டூா், காஞ்சேரிமலை புதூா், சோபனபுரம், து. ரெங்கநாதபுரம், பச்சமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூா், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூா், பெருமாள்பாளையம், த. முருங்கப்பட்டி, த. மங்கப்பட்டி, த. பாதா்பேட்டை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை செப். 2-ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.