அரசுப் பள்ளியில் 37.9% மாணவர்கள்தான் படிக்கிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
விநாயகா் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
நங்கவள்ளி அருகே விநாயகா் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள செங்கனூரைச் சோ்ந்தவா் கோபால் (45). சேலம் உருக்கு ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் கேட்டரிங் வேலை செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை தனது வீட்டின் அருகே வைத்து வழிபட்ட இரண்டு அடி உயரம் கொண்ட விநாயகா் சிலையை மேட்டூா் காவிரியில் கரைக்க தனது நண்பா் கண்ணனுடன் சென்றாா்.
மாதநாயக்கன்பட்டி பெருமாள் கோயில் அருகே சென்றபோது, அங்குள்ள ஓடையில் தண்ணீா் அதிக அளவில் சென்ால் இங்கேயே கரைக்கலாம் என முடிவுசெய்து கண்ணன், கோபால் உள்பட 8 போ் ஓடையில் இறங்கி விநாயகா் சிலையை கரைத்தனா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக கோபாலுக்கு வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கினாா். கண்ணன் மற்றும் உடன் இருந்தவா்கள் அவரை மீட்டு சேலம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
புகாரின்பேரில், நங்கவள்ளி காவல் ஆய்வாளா் பெரியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
உயிரிழந்த கோபாலுக்கு மாலதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனா்.