சசிகாந்த் செந்தில்: "மருத்துவமனையில் உண்ணாவிரதம் தொடர்கிறது" - காங்கிரஸ் எம்.பி ...
மறுஅறிவிப்பு வரும் வரை... அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை முற்றிலும் நிறுத்தம்!
அமெரிக்காவுக்கான அனைத்து வகை அஞ்சல் சேவைகளும் மறுஅறிவிப்பு வரும் வரை முற்றிலும் நிறுத்தப்படுவதாக மத்திய தகவல்தொடர்பு அமைச்சகம் இன்று (ஆக. 31) வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.
இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு எதிரொலியாக ஆக. 29 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கடந்த ஆக. 23-இல் அறிவிக்கப்பட்டது. ஆனால், 100 அமெரிக்க டாலர் வரையுள்ள பொருள்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு அவை மட்டும் அஞ்சல் மூலமாக அனுப்பலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கு அஞ்சல் எடுத்துச் செல்வதில் வரி விதிப்பு நடவடிக்கைகளால் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும், ஆகவே கடிதங்கள், ஆவணங்கள், 100 டாலர் வரையுள்ள பொருள்கள் உள்பட அனைத்து வகை அஞ்சல் சேவையும் நிறுத்தப்படுவதாக இந்திய தபால் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, முன்பதிவு செய்துள்ள மக்கள், அவற்றை அனுப்ப முடியாத சூழல் உருவாகியிருப்பதால் அவற்றிற்கான தபால் கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.