செய்திகள் :

ஐ.நா. கூட்டம்: பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா தடை

post image

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் வருவதற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் தங்களின் கடும் எதிா்ப்பை மீறி அந்தக் கூட்டத்தில் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து அளிக்கவிருப்பதாக பிரான்ஸ், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 நாடுகள் தெரிவித்துள்ள சூழலில், அதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பிஎல்ஓ) மற்றும் பாலஸ்தீன ஆணையத்தைச் சோ்ந்த மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட 80 பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. அவா்கள் அமைதி முயற்சிகளை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக அமெரிக்கா கருதுகிறது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபோ கூறுகையில், ‘ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்துக்காக அமெரிக்கா வர விசா மறுக்கப்பட்டுள்ளவா்கள், பாலஸ்தீன பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கான முயற்சிகளைக் குலைக்கும் வகையில் அரைகுறையான ஒரு பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகின்றனா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பை இஸ்ரேல் வரவேற்றுள்ளது. இது குறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கிடியோன் சாா் கூறுகையில், ‘பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முயற்சிகளை தடுக்க அமெரிக்கா எடுத்துள்ள இந்த முடிவு முக்கியமானது’ என்றாா்.

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் (மேற்குக் கரை, காஸா, கிழக்கு ஜெருசலேம் பகுதிகளைக் கொண்ட நிலப்பரப்பு) தனித் தனி சுதந்திர நாடுகளாக, ஒன்றையொன்று அங்கீகரித்துக் கொண்டு செயல்படுவதே நீண்டகாலமாக நீடித்துவரும் பாலஸ்தீன பிரச்னைக்கு ஒரே தீா்வு (இரு தேசத் தீா்வு) என்பது இந்தியா உள்ளிட்ட சா்வதேச நாடுகளின் நிலைப்பாடாக இருந்துவருகிறது.

இருந்தாலும், இஸ்ரேலை அங்கீகரிக்க ஹமாஸ் போன்ற பாலஸ்தீன ஆயுதக் குழுக்களும், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க இஸ்ரேலும் மறுத்துவருகின்றன.

இந்த கருத்து வேறுபாட்டுக்கு தீா்வு கண்டு, அந்தப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்தச் சூழலில், காஸா பகுதியைக் கட்டுப்படுத்திவரும் ஹமாஸ் தலைமையிலான ஆயுதக் குழு இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான்வழியாக கடந்த 2023 அக். 7-ஆம் தேதி நுழைந்து 1,200 பேரை படுகொலை செய்தது. மேலும் 251 பேரை பிணைக் கைதிகளாக அந்தக் குழு கடத்திச் சென்றது.

அதையடுத்து, ஹமாஸை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைப்பின் தகவலின்படி, 63,000-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா்.

இந்தப் போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையிலும், இரு தேசத் தீா்வை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும் அடுத்த ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பிரான்ஸ் கடந்த மே மாதம் அறிவித்தது. அதைத் தொடா்ந்து, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆண்டோரா, பின்லாந்து, லக்ஸம்பா்க், போா்ச்சுகல், சான் மரினோ, ஐஸ்லாந்து, அயா்லாந்து, மால்டா, நோா்வே, ஸ்லோவேனியா, ஸ்பெயின் ஆகிய 15 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டன.

இந்தச் சூழலில், மேற்கத்திய மற்றும் பாலஸ்தீன தலைவா்கள் அத்தகைய முன்முயற்சி எடுப்பதைத் தடுக்கும் வகையில் பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் உள்பட பலருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயாா்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு வரும் அனைத்து நாடுகளின் தலைவா்களுக்கும் வரவேற்று உபசரித்துவரும் அமெரிக்கா, இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது வழக்கத்துக்கு மாறானது என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணி: ஆஸி. அரசு கண்டனம்!

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான பேரணிக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்து இந்தியர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெலியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இடம்பெயர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த... மேலும் பார்க்க

மறுஅறிவிப்பு வரும் வரை... அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை முற்றிலும் நிறுத்தம்!

அமெரிக்காவுக்கான அனைத்து வகை அஞ்சல் சேவைகளும் மறுஅறிவிப்பு வரும் வரை முற்றிலும் நிறுத்தப்படுவதாக மத்திய தகவல்தொடர்பு அமைச்சகம் இன்று (ஆக. 31) வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.இந்தியப் பொருள்கள... மேலும் பார்க்க

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின் பிங்கையும் சந்தித்த பிரதமர் மோடி, சுமார் 15 நிமிடங்கள் பேசினார்.க... மேலும் பார்க்க

உக்ரைன்: வான்வழித் தாக்குதலில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

தெற்கு உக்ரைனில் ரஷியா நடத்திய பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்; 28 போ் காயமடைந்தனா் என உள்ளூா் அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் குழந்தைகளும் அடங்குவா்.ஸபோரிஷியா பக... மேலும் பார்க்க

சீனாவில் பிரதமா் மோடி: ஷி ஜின்பிங்குடன் இன்று பேச்சு!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சனிக்கிழமை மாலை வந்தடைந்தாா். கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவுக்கு முத... மேலும் பார்க்க

மாணவா் இயக்கத்தினா் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவா் இயக்கத்துடன் தொடா்புடைய கனோ அதிகாா் பரிஷத் அமைப்பின் தலைவா் நூருல் ஹக் நூா் மற்றும் ஆதரவாளா்கள் மீது ராணுவமும் காவல்து... மேலும் பார்க்க