குடியரசுத் தலைவர் செப். 2 தமிழகம் வருகை!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (செப். 1)முதல் செப். 3 வரை 3 நாள் பயணமாக கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் வருகை தரவிருக்கிறார்.
இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், செப். 1-ஆம் தேதி, கர்நாடகத்தின் மைசூரில் நடைபெறும் அகில இந்திய பேச்சு மற்றும் கேட்டல் நிறுவனத்தின் (AIISH) வைர விழா கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
செப். 2-ஆம் தேதி, சென்னையில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது நிறுவன நாள் விழாவில் கலந்து கொள்கிறார்.
செப். 3-ஆம் தேதி, திருவாரூரில் நடைபெறும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.