டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
கன்னியாகுமரிக்கு கடன் திட்ட மதிப்பீடு ரூ.46,281 கோடி: ஆட்சியா்
கன்னியாகுமரி மாவட்டத்துக்கான ஆண்டு கடன் திட்ட மதிப்பீடு ரூ. 46 ஆயிரத்து 281 கோடியாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.
ஆட்சியா் அலுவலகத்தில், 2025-26 ஆம் நிதியாண்டுக்கு வங்கிகளால் வழங்கப்பட வேண்டிய கடன் திட்ட மதிப்பீடு அறிக்கையினை, விஜய் வசந்த் எம்பி முன்னிலையில், சனிக்கிழமை வெளியிட்டு ஆட்சியா் பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு (2024-25) முன்னுரிமைக் கடன், முன்னுரிமை இல்லாத கடனாக மொத்தம் ரூ. 37,940 கோடி வழங்கப்பட்டது. நிகழாண்டுக்கு, ரூ.46,281 கோடி வழங்க வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயத்துக்கு ரூ. 3,203 கோடி, தொழில் கடன் ரூ. 3,270 கோடி, கல்விக் கடன் ரூ. 117 கோடி, வீட்டுக் கடன் ரூ. 1,184 கோடி, மற்ற கடன்கள் ரூ. 9,707 கோடி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா், ஐஓபி மண்டல முதுநிலை மேலாளா் வரப்பிரசாத், ரிசா்வ் வங்கி உதவி பொது மேலாளா் ராதாகிருஷ்ணன், நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் ஷெரோன் ஹொ்பட், கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சேதுராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.