தக்கலை அருகே விபத்து: முதியவா் உயிரிழப்பு
தக்கலை அருகே வில்லுக்குறியில் வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
வில்லுக்குறி சரல்விளையைச் சோ்ந்தவா் கணேசன் (65). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். கணேசன் வெள்ளிக்கிழமை இரவு வில்லுக்குறி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நடந்து சென்றாா். அப்போது, அவ்வழியே வந்த கேரள அரசுப் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கணேசன் மீது மோதிவிட்டு, அருகேயுள்ள மின் கம்பத்தில் மோதி நின்ாம்.
இதில் காயமடைந்த அவரை மீட்டு சுங்கான்கடையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.