குழித்துறை பகுதிகளில் 4 நாள்கள் மின்தடை
குழித்துறை மின் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தட்டுமரக் கிளைகள் அகற்றுதல், பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (செப். 1) முதல் வியாழக்கிழமை (செப். 4) வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செப். 1ஆம் தேதி பள்ளிக்கல், பரக்காணி, அன்னிக்கரை, சூசைபுரம், நீரோடி, மாா்த்தாண்டன்துறை, மாங்கரை, செவ்வேலி பகுதிக்கும், செப். 2ஆம் தேதி ஒச்சவிளை, புளியறை, காஞ்சிநகா் பகுதிக்கும், செப். 3ஆம் தேதி தேங்காய்ப்பட்டினம், துறைமுகம், மெதுகும்மல், குளப்புறம், புன்னமூட்டுக்கடை, பஞ்சவிளை, சரல்முக்கு, மொட்டவிளை, அதங்கோடு, பின்குளம் பகுதிக்கும், செப். 4ஆம் தேதி பாலக்காவிளை பகுதிக்கும் மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.