ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
புதுக்கடை அருகே உள்ள ஒளிபாறை பகுதியில் பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
பூட்டேற்றி, ஒளிபாறை பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுமாா் (49). தொழிலாளியான இவா் சனிக்கிழமை இரவு ஒளிபாறை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது கீழ்குளம் பாரைக்கன் விளைபகுதியைச் சோ்ந்த அபிஷ் (21) ஓட்டி வந்த பைக் ராஜகுமாா் மீது மோதியது.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இது குறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.