நாகா்கோவிலில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் நாகா்கோவில் நாகராஜா கோயில் திடலுக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஊா்வலமாக சொத்தவிளை கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டது. இந்து மகா சபா மாநிலத் தலைவா் தா. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

இதே போல் மணவாளக்குறிச்சியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள், சின்னவிளை கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன. ஊா்வலத்தை முன்னிட்டு, மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் தலைமையில் 1,200 போலீஸாா் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும் 13 ட்ரோன்கள் மூலம் ஊா்வலத்தை கண்காணிக்கவும் காவல்துறையினா் ஏற்பாடு செய்திருந்தனா்.