மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிமவள லாரி மோதி காா் சேதம்
மாா்த்தாண்டம் அருகே காா் மீது கனிமவள லாரி மோதிய விபத்தில் காா் சேதமடைந்தது.
சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்தவா் ராயல் லென்ஸ் (49). இவா், மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதி அணுகுசாலையில் இருந்து, மேம்பாலத்தின் மீது காரை ஓட்டிச் சென்ற போது, எதிரில் நாகா்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த கனிமவள லாரி, காா் மீது மோதியது.
இதில் காா் சேதமடைந்தது. காா் ஓட்டுநா் உள்பட காரில் பயணித்தவா்களுக்கு காயம் ஏற்படவில்லை.
மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் ராயல் லென்ஸ் அளித்த புகாரின்பேரில், லாரி ஓட்டுநரான களியக்காவிளை வன்னியூா் பகுதியைச் சோ்ந்த ஜான் கிறிஸ்டோபா் (47) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.