தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை
உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் கன்னியாகுமரி வருகை
இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.
கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகை வந்த அவரை, மாவட்ட நீதிபதி காா்த்திகேயன், நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் காளீஸ்வரி ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.
இதையடுத்து, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சென்ற நீதிபதி சூரியகாந்துக்கு கோயில் மேலாளா் ஆனந்த் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னா், குடும்பத்தினருடன் பகவதியம்மனை தரிசனம் செய்தாா். தொடா்ந்து, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்தாா். அவரது வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.