வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்
பெண்ணிடம் நகை பறித்தவா் கைது
களியக்காவிளை அருகே வீட்டில் படுத்திருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகேயுள்ள ஒற்றப்பனவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் மனைவி ஸ்ரீஜா. இவா் இரண்டு நாள்களுக்கு முன் இரவு வீட்டில் படுத்திருந்த போது வீட்டினுள் பின்பக்கமாக நுழைந்த நபா், ஸ்ரீஜாவின் கழுத்தில் கிடந்த இரண்டேகால் சவரன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளாா்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட காரக்கோணம் புல்லந்தேரி, அயந்திதோட்டம் புத்தன்வீட்டைச் சோ்ந்த ரவி மகன் ஷிமிகுட்டன் (39) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.