அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!
ஓய்வுபெறும் நாளில் ஊழியர்கள் இடைநீக்கம் இல்லை: தமிழ்நாடு அரசு
சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான இடைநீக்கம்(சஸ்பெண்ட்) செய்யப்படுவதை தவிர்க்க, விதிகளை திருத்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்ததன் அடிப்படையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி,
குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு ஊழியர்கள் உரிய நாளில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவார்கள்; குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிவடைந்தபிறகே பணப் பலன்களைப் பெற முடியும்.
இதுவரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.77,000-ஐ நெருங்கியது!