செய்திகள் :

முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜக்தீப் தன்கர் விண்ணப்பம்!

post image

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரான ஜக்தீப் தன்கர், கடந்த 1993 முதல் 1998 ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷான்கார் தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார்.

அதன்பின்னர், 2019 ஆம் ஆண்டு வரை ஜக்தீப் தன்கருக்கு வழங்கப்பட்டு வந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியமானது, அவர் மேற்கு வங்கத்தின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜக்தீப் தன்கர், உடல் நலக் குறைவினால் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தனது குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், 2019 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை மீண்டும் தனக்கு வழங்க வேண்டுமென ராஜஸ்தான் அரசிடம் அவர் விண்ணப்பித்துள்ளார்.

அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அம்மாநில தலைமைச் செயலகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, மாதம் ரூ.35,000 வரையில் வழங்கப்படும் ஓய்வூதியமானது அவர்கள் 70 வயதை அடைந்தவுடன் அதில் 20 சதவிகிதம் அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், தற்போது 74 வயதாகும் ஜக்தீப் தன்கருக்கு மாதம் ரூ.42,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

Former Vice President Jagdeep Dhankhar has reportedly applied for a pension for a former member of the Rajasthan Legislative Assembly.

அயோத்தி கோயில் கொடியேற்ற விழா! குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்பு!

உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடைபெறும் கொடியேற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்பதாக, அக்கோயில் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் பேரணியில் இணைகிறது திரிணமூல் காங்கிரஸ்!

பாட்னாவில் நடைபெறும் ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பேரணியில் செப்டம்பர் 1ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கிறது. அக்கட்சியின் சார்பில் மக்களவை எம்.பி. யூசுப் பதானும், உ.பி.தலைவர் லிலிதேஷ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்!

பிரதமர் நரேந்திர மோடியுடன், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி செல்போன் வாயிலாக உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 7 ஆண்டுகள் கழித்து அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் ச... மேலும் பார்க்க

ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் மூத்த மேலாளர் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் (AAI) மூத்த மேலாளராகப் பணிபுரிந்து வந்த ராகு விஜய் என்பவர், டேராடூன் விமான ... மேலும் பார்க்க

26 ஆண்டுகளுக்குப் பின்..! இளைஞரின் நுரையீரலில் இருந்த பேனா மூடியை அகற்றிய மருத்துவர்கள்!

தில்லியில், 26 ஆண்டுகளாக இளைஞர் ஒருவரின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர். தில்லியில், 33 வயதுடைய இளைஞர் ஒருவர் சமீபத்தில் தொடர... மேலும் பார்க்க

உதய்பூரில் நிகழ்ந்த விபத்தில் பாஜக எம்எல்ஏ உள்பட இருவர் காயம்

உதய்பூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாஜக எம்எல்ஏ உள்பட இருவர் காயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமந்த் பகுதியைச் சேர்ந்தவர் பாஜக எம்எல்ஏ தீப்தி கிரண் மகேஸ்வரி. இவரும், அவரது உதவியாளர் மற்றும் ஓட்டுந... மேலும் பார்க்க