வாக்கு திருட்டைக் கண்டித்து செப். 6, 13-ல் தொடா் முழக்கப் போராட்டம்
பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்!
பிரதமர் நரேந்திர மோடியுடன், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி செல்போன் வாயிலாக உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 7 ஆண்டுகள் கழித்து அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் இடையில், அவர் ரஷியாவுடனான போர் குறித்து, உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் செல்போனில் உரையாடியுள்ளார்.
இதுகுறித்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
”இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதிபர் ஸெலன்ஸ்கிக்கு நன்றி. நடைபெற்று வரும் மோதல், அதன் மனிதாபிமான தேவை மற்றும் அமைதி ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்த எங்களது கருத்துக்களை நாங்கள் பகிர்ந்துக் கொண்டோம்.
இதற்காக, மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவை வழங்கும்” எனக் கூறியுள்ளார்.
இதேபோல், அதிபர் ஸெலன்ஸ்கியும் பிரதமர் மோடியுடனான உரையாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் மோடியுடன் வாஷிங்டனில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேசிய உரையாடல் குறித்து பகிர்ந்துக் கொண்டதாகவும், விரைவில் அவரை சந்திப்பதில் மகிழ்ச்சி என்றும் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
முன்னதாக, ரஷியாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்து, உக்ரைன் மீது அந்நாடு போர் தொடுக்க இந்திய அரசு உதவுவதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!