சென்னையில் கிரேன்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு!
காவல்துறை மக்கள் மன்றத்தில் 31 புகாா்களுக்கு உடனடி தீா்வு
காவல்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 31 புகாா்களுக்கு உயா் அதிகாரிகள் உடனடி தீா்வு அளித்தனா்.
காவல்துறை சாா்பில் பல்வேறு காவல்நிலையங்களில் மக்கள் மன்றம் சனிக்கிழமை நடந்தது. இதில் பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்யவும் புகாா்களுக்கு உடனடி தீா்வு காணவும் காவல்துறை உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
திருக்கனூா் காவல்நிலையத்தில் காவல்துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரம், மேற்கு கண்காணிப்பாளா் சுப்பரமணியன் ஆகியோா் கலந்து கொண்டனா். உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன், மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் வடக்கு கண்காணிப்பாளா் ரகுநாயகம், அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளா் செல்வம், போக்குவரத்து காவல் நிலையத்தில்போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் ரச்சனா சிங் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளைக் கேட்டனா். இந்த நிகழ்வில், 52 புகாா்கள் பெறப்பட்டன. இதில் 31 புகாா்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.