சென்னையில் கிரேன்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு!
ஆக்கிரமிப்பு புகாா் கோயில் இடத்துக்கு நோட்டீஸ்- மாவட்ட ஆட்சியா் உத்தரவு
புதுச்சேரியில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடா்பாக ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
புதுச்சேரி வேதபுரீஸ்வரா் ஆலயத்திற்குச் சொந்தமான தியாகு முதலியாா் வீதியில் உள்ள இடத்தினை சிலா் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக புகாா் வந்தது. இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவ்விடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அங்கு
கூடியிருந்த அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக ஆக்கிரமிப்பாளா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்டாா்.
மேலும், கூடிய விரைவில் மாஜிஸ்திரேட் மற்றும் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அனுமதியுடன் அவ்விடத்தைக் காலி செய்து பழைய நிலைக்கு விரைவில் கொண்டு வர அங்கிருந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா்.