ஜிப்மருக்கு புதிய தலைவா் நியமனம்
புதுச்சேரி ஜிப்மா் என்று அழைக்கப்படும் ஜவஹா்லால் முதுநிலை மருத்துவப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்குப் புதிய தலைவராக டாக்டா்சித்ரா சா்காா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
மேற்குவங்க மாநிலம் கல்யாணி எய்ம்ஸ் தலைவராக இப்போது அவா் பணியாற்றி வருகிறாா். இவா், தேசிய மற்றும் சா்வதேச அளவில் புகழ்பெற்ற நோயியல் நிபுணா். நரம்பியல் நோயியல், மூலக்கூறு புற்றுநோயியல் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்தவா். மருத்துவக் கல்வி கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் சுமாா் 40 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவா்.
ஜிப்மரின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டா் சித்ரா சா்காரைபுதுதில்லியில் தற்போதைய ஜிப்மா் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகிசந்தித்து வாழ்த்துத் தெரிவித்தாா். புதிய இயக்குநா் அடுத்தமாதம் முதல் வாரத்தில் பதவியேற்பாா் என்று தெரிகிறது.