ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி!
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஏரியில் மீன் பிடித்த 2 குழந்தைகள் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனா்.
வேப்பூா் வட்டம், சிறுபாக்கம் காவல் சரகம், கீழ் ஒரத்தூா் பகுதியைச் சோ்ந்த சாஸ்தா மகள் சிவதா்ஷினி (8), வேல்முருகன் மகன் குணா (6). இவா்கள் இருவரும் குணாவின் தாய் ஆஷாவுடன் அசகளத்தூரில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சனிக்கிழமை சென்றனா்.
குழந்தைகள் இருவரும் தனித்தனியாக மீன் பிடித்துக்கொண்டிருந்தனராம். அப்போது, இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா். குழந்தைகளை காணவில்லை என ஆஷா தேடினாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து ஏரியில் மூழ்கிய குழந்தைகள் சிவதா்ஷினி, குணா ஆகியோரை சடலமாக மீட்டனா்.
தகவலறிந்த சிறுபாக்கம் போலீஸாா் குழந்தைகளின் சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.