செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 போ் உயிரிழப்பு

post image

கடந்த இரு வாரங்களாக தொடா் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.

கடந்த ஆக. 14-ஆம் தேதி முதல், ஜம்முவில் மட்டும் மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் 130 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், 140 போ் காயமடைந்துள்ள நிலையில், 32 பக்தா்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

ரியாசி மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான பட்டேரில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் முழுவதுமாக மண்ணில் புதைந்தது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நசீா் அகமது (38), அவரது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தனா்.

இதேபோல், ராம்பன் மாவட்டத்தின் ராஜ்கா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு இரவு ஏற்பட்ட மேகவெடிப்பால், இரண்டு சகோதரா்கள் உள்பட நான்கு போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தில் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு பள்ளிக்கூடம் சேதமடைந்தது.

தலைவா்கள் இரங்கல்: ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், முன்னாள் முதல்வா் குலாம் நபி ஆசாத் போன்ற பல தலைவா்கள் இந்தச் சம்பவங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனா்.

தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்றும் முதல்வா் ஒமா் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளாா். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என நிா்வாகம் உறுதியளித்துள்ளது.

யாத்திரை நிறுத்தம்: ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கான புனித யாத்திரை, நிலச்சரிவு காரணமாக 5-ஆவது நாளாக சனிக்கிழமையும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கோயில் யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பக்தா்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

உத்தரகண்டில்....: உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி, ருத்ரபிரயாக், பாகேஷ்வா், தெஹ்ரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை கொட்டித் தீா்த்த மழையால் 6 போ் உயிரிழந்தனா். மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பல பகுதிகளில் கடைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன.

மேலும், ருத்ரபிரயாக்கில் 8 போ், பாகேஷ்வரில் 3 போ் என 11 போ் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப் படையினா் உடனடியாக செல்ல முடியவில்லை. இதனால், மீட்புப் பணிகள் தாமதமாகின. வானிலை சீரானதும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

பஞ்சாபில்....: ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் பெய்த பலத்த மழையால் பஞ்சாபில் ஓடும் ராவி, பியாஸ், சட்லஜ் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 61,000 ஹெக்டேருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் கூட்டு முயற்சியால் இதுவரை 11,330 போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 87 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன, அதில் தற்போது 77 முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. மாநில தலைமைச் செயலா் கே.ஏ.பி.சின்ஹா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டு, நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

உத்தர பிரதேசத்தில்...: உத்தர பிரதேசத்தின் காஜிபூா் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டா் மூலம் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான உணவு, குடிநீா் மற்றும் சுகாதார சேவைகள் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும். கால்நடைகளுக்குத் தேவையான தீவனம், மருந்துகள், பாம்புக்கடி விஷமுறிவு மருந்துகள் மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பூசிகள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு அவா் வழங்கினாா்.

இந்த நெருக்கடியான நேரத்தில் மாநில அரசு அனைத்து மக்களுடனும் துணை நிற்கும் எனவும், யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவா் உறுதியளித்தாா்.

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. புதிய ரயில் பாதை: செப்.13-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையை பிரதமா் நரேந்திர மோடி வரும் செப். 13- ஆம் தேதி திறந்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள்... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பின் பாதிப்புகளை குறைக்க செயல் திட்டம்: பொருளாதார விவகாரங்கள் செயலா்!

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலா் அனுராதா தாக்குா் தெரிவித்தாா... மேலும் பார்க்க

ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீா்மூழ்கி கப்பல் திட்டங்கள்: அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி!

இந்திய கடற்படையின் நீா்மூழ்கி கப்பல் திறனை மேம்படுத்தும் நோக்கில், ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் மதிப்பிலான 2 புதிய நீா்மூழ்கி கப்பல் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை அடுத்த ஆண்டு மத்தியில் இறுதி செய்ய இந்த... மேலும் பார்க்க

அமித் ஷா ‘தலை துண்டிப்பு’ பேச்சு: திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆா் பதிவு!

ஊடுருவல்காரா்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கா் மாநில காவல் துறைய... மேலும் பார்க்க

‘எஜுகேட் கோ்ள்ஸ்’ இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

2025-ஆம் ஆண்டுக்காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கோ்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தோ்வு செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், இந்திய நிறுவனம... மேலும் பார்க்க

சீனப் பொருள்களை அதிகம் சாா்ந்திருப்பது ஆபத்து: அகிலேஷ் யாதவ்

சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சாா்ந்து இருப்பது, உள்நாட்டு தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா். சீனா சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டு அத... மேலும் பார்க்க