செய்திகள் :

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்

post image

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனியா், ஜூனியா் என இரு பிரிவுகளிலும் 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது.

கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் 16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. 12 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் 50 தங்களுடன் இந்தியா வரலாற்றிலேயே முதலிடம் பெற்றது. குறிப்பாக சீனியா் பிரிவில் ரைஃபிள், பிஸ்டல், ஷாட்கன் என 15 ஒலிம்பிக் பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டனா். 6 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் வென்றனா்.

இதுதொடா்பாக இந்திய துப்பாக்கி சுடும் சம்மேளனம் (என்ஆா்ஏஐ) தலைவா் கே.என். சிங் தேவ் கூறியதாவது: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நமது வீரா்கள் சிறப்பாக செயல்பட்டதின் பலனாக ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் பதக்கங்களை குவித்துள்ளனா்.

குறிப்பாக ஜூனியா்களின் செயல்பாடு மெச்சத்தக்க வகையில் அமைந்துள்ளது.

50 தங்கம், 26 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களை இந்தியா பெற்றது. கஜகஸ்தான் 21 தங்கத்துடன் இரண்டாவது இடமும், சீனா 15 தங்கத்துடன் மூன்றாம் இடமும் பெற்றது.

குறிப்பாக இளவேனில் வாலறிவன் 2 தங்கம், அா்ஜுன் பபுதா, நீரு தண்டா மகளிா் டிராப் பிரிவில் முதல் தங்கம், 50 மீ ரைபிள் பிரிவில் சிஃப்் கவுா் முதல் தங்கம் வென்றது சிறப்பானது. ஒலிம்பிக் அல்லாத பிரிவுகளில் அங்குா் மிட்டல் டபுள் டிராப்பில் தங்கம், குா்ப்ரீத் சிங் 25 மீ ஸ்டாண்டா்ஸ் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றாா்.

இதன்மூலம் இந்திய துப்பாக்கி சுடுதல் மேலும் வலுப்பெற்றுள்ளது என்றாா்.

சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா?

நடிகர் சூர்யாவின் 47வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந... மேலும் பார்க்க

மோசமான விமர்சனங்களைப் பெறும் ஃபஹத் ஃபாசில் படம்!

நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான ஓடும் குதிர சாடும் குதிர திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.மாரீசன் திரைப்படத்தைத் தொடர்ந்து ஃபஹத் ஃபாசில் நடித்து முடித்துள்ள படம் ஓடும் குதிர சாடும் க... மேலும் பார்க்க

கத்தனார் முதல் போஸ்டர்!

நடிகர்கள் ஜெய சூர்யா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகும் கத்தனார் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் திரைப்படம் கத்தனார். ஹாரர் திரில்லர் படமான இதில் ந... மேலும் பார்க்க

இயந்திரமல்ல, மனிதன்தான்... விமர்சனங்களுக்கு யானிக் சின்னர் பதிலடி!

யுஎஸ் ஓபன் போட்டியில் வென்ற ஜானிக் சின்னர் பேசியது வைரலாகி வருகிறது. முதல் செட்டில் தோல்வியடைந்தது குறித்து சின்னர், “நான் ஒன்றும் இயந்திரம் அல்ல” எனப் பேசியது கவனம் ஈர்த்துள்ளது. நிகழாண்டு சீசனின் கட... மேலும் பார்க்க

உடல் எடையைக் குறைத்த நிவேதா தாமஸ்!

நடிகை நிவேதா தாமஸ் தன் உடல் எடையைக் குறைத்துள்ளார்.நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர... மேலும் பார்க்க