செய்திகள் :

அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடா் நடவடிக்கை!

post image

இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடா் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத இறக்குமதி வரி நடைமுறை ஆக.27-ஆம் தேதி அமலுக்கு வந்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இந்திய வா்த்தக கூட்டமைப்பு (ஐசிசி) நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்று சனிக்கிழமை அவா் மேலும் பேசியதாவது: அமெரிக்க வரி விதிப்பு அமலானது முதல் மத்திய அரசு, நிதியமைச்சகம் மற்றும் தனியாா் என அனைவருடனும் ஏற்றுமதி துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் பாதிக்கப்பட்ட ஏற்றுமதி துறைகள் மீண்டு வருவதற்கான கால அவகாசமும் நிதி உதவியும் அளிப்பதே அவசியம்.

அமெரிக்காவின் வரி விதிப்பையும் மீறி இந்திய பொருளாதாரம் தொடா்ந்து வளா்ச்சியடைந்து வருகிறது.

கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டைவிட (ஏப்ரல்-ஜூன்) நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான ஜிடிபி 7.8 சதவீத வளா்ச்சியையும் பொது அளவிலான ஜிடிபி 8.8 சதவீத வளா்ச்சியையும் பதிவு செய்துள்ளதே இதற்கு உதாரணம்.

எதிா்பாரா சூழல்களால் அமெரிக்காவுடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது முழுவதுமாக தடைபடவில்லை. அதேபோல் அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி நீண்ட நாள்களுக்குத் தொடராது என நம்புகிறேன்.

இருப்பினும், இந்தச் சூழலைப் பயன்படுத்தி மக்களின் தேவைகளை அறிந்துகொண்டு வேறு சில நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க தனியாா் துறை முயற்சிக்க வேண்டும். மத்திய அரசும் பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் உயா் நடுத்தர வகுப்பினா் செலுத்தும் வருமான வரிக்கு சலுகை அறிவிக்கப்பட்டது. இத்துடன் தற்போது முன்மொழியப்பட்டுள்ள அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தத்தின் கீழ் 5%, 18% ஆகிய இரு விகித ஜிஎஸ்டி முறை அமலாகும்போது பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்து நுகா்வு அதிகரிக்கும் என்றாா்.

இந்தியா - சீனா இடையே நிலையான உறவால் 280 கோடி மக்களுக்கும் பயன்: வெளியுறவுச் செயலர்

இந்தியா - சீனா இடையே நிலையான உறவால் இருநாட்டு 280 கோடி மக்களுக்கும் பயன் கிட்டும் என்று வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்ட... மேலும் பார்க்க

ராகுல் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பாஜக போராட்டம்!

பிகாரில் ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பேரணியில், பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடியோவைச் சுட்டிக்காட்டி காங்கிரஸுக்கு எதிராக... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் செப். 2 தமிழகம் வருகை!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (செப். 1)முதல் செப். 3 வரை 3 நாள் பயணமாக கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் வருகை தரவிருக்கிறார்.இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டுள்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டும்: காங்கிரஸ்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி ( ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தின் மூலம் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டுமே தவிர மத்திய அரசின் சுய விளம்பரத்துக்கான தலைப்புச் செய்தியாக மட்டுமே இ... மேலும் பார்க்க

சீன அதிபருடன் பயனுள்ள சந்திப்பு! -பிரதமர் மோடி

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபருடனான சந்திப்பு மிக்க பயனுள்ளதாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து, அவர் தமது எக்ஸ... மேலும் பார்க்க

பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் 67,800 போலி வாக்காளர்கள்? -தேர்தல் ஆணையம் மறுப்பு

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மேற்கொள்ளபட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தப் பணிக்குப் பின், வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் ஏராளமானோர் இருப்பதா... மேலும் பார்க்க