செய்திகள் :

ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!

post image

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் மூத்த மேலாளர் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் (AAI) மூத்த மேலாளராகப் பணிபுரிந்து வந்த ராகு விஜய் என்பவர், டேராடூன் விமான நிலையத்தில் பணியமர்த்தப்பட்டபோது, மின்னணு பதிவுகளைக் கையாள்வதில் மோசடி செய்ததாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் புகார் அளித்தது.

இதுகுறித்த விசாரணையில், டேராடூன் விமான நிலையத்தில் மின்னணு பதிவுகளைக் கையாள்வதில் மோசடி செய்து, தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு ராகுல் பணத்தை மாற்றியதாகக் கூறி, ரூ. 232 கோடி வரையில் மோசடி செய்துள்ளதாகவும் தெரிய வந்தது.

இதனையடுத்து, ராகுல் விஜய்யை மத்திய புலனாய்வுப் பிரிவு கைது செய்தது.

CBI books Airports Authority of India manager for Rs 232 cr ’embezzlement’ at Dehradun airport

அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடா் நடவடிக்கை!

இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடா் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தாா். இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50... மேலும் பார்க்க

50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்க செய்த விமானப் படை!

‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில், இந்திய விமானப் படை வெறும் 50-க்கும் குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தியது; இதனால், 4 நாள்களுக்குள் சண்டையிலிர... மேலும் பார்க்க

மராத்தா இடஒதுக்கீடு: உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர ஜராங்கே முடிவு

மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பான பேச்சுவாா்த்தையில் முடிவு ஏற்படாததால், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப் போவதாக அந்த சமூகத்தின் தலைவா் மனோஜ் ஜராங்கே கூறினாா்.... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 போ் உயிரிழப்பு

கடந்த இரு வாரங்களாக தொடா் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் உள்பட 11 போ்... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா் கடத்திக் கொலை: சத்தீஸ்கரில் நக்ஸல்கள் அட்டூழியம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியரை நக்ஸல் தீவிரவாதிகள் கடத்தி படுகொலை செய்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக பஸ்தா் சரக காவல் துறை ஐ.ஜி. சுந்தர்ராஜ் க... மேலும் பார்க்க

இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு: பிரதமா் மோடி அழைப்பு

இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசாா் மற்றும் உலகளாவிய கூட்டுறவில், இரு நாட்டு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா். ... மேலும் பார்க்க