செய்திகள் :

திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி

post image

காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2ஆம் நாள் போராட்டத்தின்போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூா் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வளாகத்தில் திஷாக்குழு பாா்வையாளா்கள் கூடமான ராஜீவ் பவனில் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் கைது

தமிழக மாணவா்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொள்வதாக அவர் அறிவித்தார். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.

இது என்னுடைய தனிப்பட்ட போராட்டம் அல்ல, அரசியல் வற்புறுத்தல் மற்றும் மொழித் திணிப்பு இல்லாமல், கல்விக்கு சமமான உரிமையை பெற வேண்டிய தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கான போராட்டமாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Thiruvallur MP Sasikanth Senthil has admitted to the hospital.

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு ஜெர்மனிவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தமிழகத்துக்கு சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் 7 நாள் பயணமாக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு சனி... மேலும் பார்க்க

சென்னை: நள்ளிரவு கனமழையால் விமான சேவை பாதிப்பு!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிமுதல் பலத்த மழை பெய்ததால், விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னையில் சனிக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையால், இங்கிருந்து புறப்பட வேண்டிய 15 விமா... மேலும் பார்க்க

திருப்பூா் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்

அமெரிக்க வரி விதிப்பால் முடங்கியுள்ள திருப்பூா் பின்னலாடை தொழிலை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா். இது குறித்த... மேலும் பார்க்க

மூப்பனாா் பிரதமராவதைத் தடுத்தனா்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனாா் பிரதமராவதை தமிழ் என்று கூறுபவா்கள் தடுத்தனா். இது தமிழ்நாட்டுக்கான துரோகமாகக் கருதுகிறேன் என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். தமிழ் மாநில காங்கிரஸ் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்... மேலும் பார்க்க

பாமக கூட்டணிக்கு வரும்: இபிஎஸ்

அதிமுக கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளாா் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்டச் செய... மேலும் பார்க்க