பூலித்தேவருக்கு தேசம் உளமாற மரியாதை செலுத்துகிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி
கொலைகள் ஒப்பீடு! தில்லியைவிட சிகாகோவில் 15 மடங்கு அதிகம்!
அமெரிக்காவின் சிகாகோ நகரில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நாளுக்குநாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அந்நாட்டு அரசும் காவல்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், கொலை சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் நிகழ்த்தப்படும் கொலை சம்பவங்களை மற்றைய நாடுகளுடன் அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசுகையில்,
2024 ஆம் ஆண்டில் சிகாகோவின் கொலை விகிதம், இந்திய தலைநகரைவிட (தில்லி) கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகம். சிகாகோவில் ஒரு லட்சம் பேர் இருக்கும் இடத்தில் 25.5 கொலைகளும், தில்லியில் 1.48 கொலைகளும் பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.
ஆனால், அவர் தெரிவித்ததற்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை அவர் அளிக்கவில்லை. அதுமட்டுமின்றி, 2022 முதல் இந்தியாவுக்கான குற்ற புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதைவிட சிகாகோவில் இருமடங்கு அதிகம் என்றும் கூறினார்.
இருப்பினும், தில்லியில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல்தேதியில் இருந்து ஜூன் 30 தேதிவரையில் குற்றங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததாக அம்மாநில காவல்துறை தரவுகள் கூறுகின்றன. ஆனால், கொலை குற்றங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. 2024-ல் 241 என்ற நிலையிலிருந்து 2025-ல் 250ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்