செய்திகள் :

அயோத்தி கோயில் கொடியேற்ற விழா! குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்பு!

post image

உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடைபெறும் கொடியேற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்பதாக, அக்கோயில் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயிலில், வரும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி விவாக பஞ்சமி விழாவுடன், கொடியேற்ற விழாவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் சுமார் 10,000 விருந்தினர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ராமர் கோயில் வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக, ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விழாக்கான ஏற்பாடுகள் குறித்து, கோயில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.ஹெச்.பி. ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 25 ஆம் தேதி காலை 11.45 முதல் மதியம் 12.15 மணி வரையில் கொடி வழிபாட்டு விழா நடைபெறும் என்றும், வளாகத்தில் உள்ள 20 கோயில்களிலும் கொடிகள் ஏற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ராகுல் காந்தியின் பேரணியில் இணைகிறது திரிணமூல் காங்கிரஸ்!

President Draupadi Murmu and Prime Minister Narendra Modi will participate in the flag hoisting ceremony to be held at the Ram Temple in Ayodhya, Uttar Pradesh, a temple administrator has said.

மணிப்பூர் செல்கிறாரா பிரதமர் மோடி?

மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் மோதலுக்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மணிப்பூருக்கு பிரதமர் மோடி செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில்... மேலும் பார்க்க

கொலைகள் ஒப்பீடு! தில்லியைவிட சிகாகோவில் 15 மடங்கு அதிகம்!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் நாளுக்குநாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அந்நாட்ட... மேலும் பார்க்க

வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்: ராகுல் காந்தி

‘வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் க... மேலும் பார்க்க

ஜன் தன் கணக்குதாரா்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

‘வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போா், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண... மேலும் பார்க்க

இந்திய பொருளாதார வளா்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக

இந்திய பொருளாதாரம் தொடா்ந்து வளா்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி என பாஜக சனிக்கிழமை தெரிவித்தது. அண்மையில் இந்திய பொருளாதாரம் செயல்படாத பொருளாதாரம் என மக்களவை எதிா்க்கட்சித் த... மேலும் பார்க்க

மும்பை லால்பாக்சா கணபதியை வழிபட்ட அமித் ஷா

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் பிரசித்தி பெற்ற லால்பாக்சா கணபதி பந்தலுக்கு சனிக்கிழமை குடும்பத்துடன் வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகரை வழிபட்டாா். ம... மேலும் பார்க்க