செய்திகள் :

பழனிசாமி பயணம் போன்று எனது பயணம் இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

post image

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் போன்று எனது பயணம் இருக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சா்வதேச முதலீடுகளை ஈா்க்கும் வகையில், ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் அரசு முறைப் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்தப் பயணத்தில் பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து விமானம் மூலம் சனிக்கிழமை காலை ஜொ்மனிக்குப் புறப்பட்டு சென்ற முதல்வா், அங்கு 3 நாள்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறாா்.

தொடா்ந்து செப்டம்பா் 1-ஆம் தேதி பிரிட்டன் தலைநகா் லண்டனுக்குச் செல்லும் அவா், அங்குள்ள கிங்ஸ் கல்லூரியில் மாணவா்கள் இடையே உரையாற்றுகிறாா். லண்டனில் உள்ள புலம்பெயா்ந்த தமிழா்களைச் சந்தித்து தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க உள்ளாா்.

இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளிலும் உள்ள தொழில்முனைவோா், தொழில் நிறுவனங்களிடம் முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக அவா் உரையாட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு புறப்படுவதற்கு முன்பாக சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின்,

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு திட்டம்

ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் இன்று என்னுடைய பயணத்தை மேற்கொள்கிறேன். செப்டம்பர் 8-ஆம் நாள் நான் தமிழ்நாட்டிற்கு திரும்பி வருகிறேன். இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு இதுவரைக்கும் 10 இலட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம். இதன்மூலமாக 32 இலட்சத்து 81 ஆயிரத்து 32 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவடைகின்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் ப்ரொடக்‌ஷனை ஸ்டார்ட் செய்துவிட்டார்கள். இந்த வளர்ச்சி வந்திருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு மத்திய அரசு வெளியிடுகின்ற புள்ளி விவரங்களே ஆதாரமாக இருக்கிறது.

என்னுடைய ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும், தமிழ்நாடு அமைதிமிகு மாநிலமாக, திறமையான இளைஞர்கள் இருக்கின்ற மாநிலமாக, வாய்ப்புகளை ஊக்குவிக்கின்ற மாநிலமாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் உயர்ந்திருக்கின்ற காரணத்தால், தரவுகளுடன் எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருக்கின்றேன்.

இதுவரைக்கும், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளுக்கு நான் பயணத்தை மேற்கொண்டு, அமெரிக்க பயணத்தில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஸ்பெயின் பயணத்தில் 3 புரிந்துணர்வு ஓப்பந்தங்கள், ஜப்பான் பயணத்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சிங்கப்பூரில் ஒரு ஒப்பந்தம் என்று 30 ஆயிரத்து 37 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யும் 36 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 18 ஆயிரத்து 498 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது.

இந்த 36 ஒப்பந்தங்களில், 23 திட்டங்கள் பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகதான் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் புறப்பட்டுச் செல்கிறேன். திரும்பி வருகின்ற அன்றைக்கும் நான் உங்களைச் சந்தித்து இது குறித்து விவரமாக சொல்லவிருக்கிறேன்.

தந்தை பெரியார் திருவுருவப் படத்திறப்பு

இந்த பயணத்தில், குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், செப்டம்பர் 4-ஆம் தேதி, ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் நடக்கின்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்கக்கூடிய ஒரு அற்புதமான நிகழ்வு நடைபெற இருக்கிறது.

உங்களுடைய வாழ்த்துகளோடு செல்கிறேன்

நாட்டிலேயே அதிவேகமாக வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் நம்முடைய தமிழ்நாட்டை நோக்கி புதிய முதலீடுகளை ஈர்க்க நான் செல்கிறேன். உங்களுடைய வாழ்த்துகள் எனக்கு வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் அன்போடு நான் புறப்பட்டுச் செல்கிறேன் என்பதையும் உங்களிடத்தில் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பழனிசாமி பயணம் வேறு; எனது பயணம் வேறு

இது போன்ற பயணங்களால் தமிழ்நாட்டிற்கு உண்மையாகவே பலன் உண்டா? ஏனென்றால், அதிமுக பொறுத்தவரையில் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, வெளிநாட்டுப் பயணத்தைப் பொறுத்தவரைக்கும், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி இதுகுறித்து கூட விமர்சனம் செய்திருக்கிறார்.

பழனிசாமி அவர்களைப் பொறுத்தவரைக்கும் தன்னுடைய பயணங்கள் எப்படி இருந்ததோ அப்படித்தான் இந்தப் பயணங்களும் இருந்திருக்கும் என்று நினைக்கிறார். ஆனால், நான் கையெழுத்திடுகின்ற அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வரப்போகின்றது - வந்திருக்கிறது.

புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் தான் இருக்கிறது. திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, புதிய கட்சிகளும் வருகிறதோ – வரவில்லையோ; புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை.

சதியை முறியடிக்கின்ற சக்தி தமிழ்நாட்டிற்கு உண்டு

பிகாரைப் போலவே தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, யார் எப்படிப்பட்ட சதியை செய்தாலும், அதை முறியடிக்கின்ற வல்லமை தமிழ்நாட்டிற்கு உண்டு. ஏன், பீகாரில்கூட தேர்தல் ஆணையம் நினைத்தது நடக்காது. உண்மையாகவே, நான் சென்றுவிட்டு வந்த அனுபவத்தைச் சொல்கிறேன். ஏனென்றால், அங்கும் மக்களை எழுச்சி பெற வைக்க தேர்தல் ஆணையம் உதவி செய்திருக்கிறது என்பதுதான் உண்மை.

சி-வோட்டர்ஸ் கருத்துக் கணிப்புக் குறித்து கேள்விக்கு பதிலளிக்கையில், எந்த கருத்துக் கணிப்பு இருந்தாலும், எல்லா கருத்துக் கணிப்புகளையும் மிஞ்சி ஒரு அமோக

வெற்றியைத்தான் திமுக கூட்டணி பெறப்போகிறது. அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

சொல்ல வேண்டிய அவசியமில்லை

விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார்.

மேலும், 2026-ல் திமுக-வுக்கு - தவெக தான் போட்டி அணி என்று ஆணித்தரமாகவும், திட்டவட்டமாகவும் விஜய் தெரிவித்திருக்கிறார். இந்த சவாலை

நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, நான் அதிகம் பேசமாட்டேன். இதற்கு நான் பேசவேண்டிய அவசியமில்லை. பேச்சைக் குறைத்து செயலில் நம்முடைய திறமையை காட்டவேண்டும் என்றார்.

அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

Chief Minister M.K. Stalin said that my trip will not be like the foreign trip of Opposition Leader Edappadi K. Palaniswami.

நெல் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் உத்தரவு: அமைச்சர்கள் நன்றி

விவசாயிகளின் வாழ்வாரத்தை உயர்த்தும் வகையில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நெல் கொள்முதல் விலையை தற்போது உயர்த்தி உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்த... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

கமுதி அருகே சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது பூத உடலுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மலர் வளையம் வைத்து மரியாதை... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரதம்!

திருவள்ளூா்: தமிழக மாணவா்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: கர்நாடக அணைகளில் நீர் திறப்பு மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

ஓய்வுபெறும் நாளில் ஊழியர்கள் இடைநீக்கம் இல்லை: தமிழ்நாடு அரசு

சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான இடைநீக்கம்(சஸ்பெண்ட்) செய்யப்படுவதை தவிர்க்க, விதிகளை திருத்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்ததன் ... மேலும் பார்க்க

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: பவுன் ரூ.77,000-ஐ நெருங்கியது!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76.960-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.சென்னையில் இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்... மேலும் பார்க்க