உக்ரைன்: ரஷியாவின் தாக்குதலில் முன்னாள் நாடாளுமன்றத் தலைவர் பலி!
உக்ரைன் மீதான தாக்குதலில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரி பருபி (54) கொல்லப்பட்டார்.
தெற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளைக் கொண்டு ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் உக்ரைன் நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரி பருபி (Andriy Parubiy) சுட்டுக் கொல்லப்பட்டார்; மேலும், சுமார் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆண்ட்ரியின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, அவர் மீது தாக்குதல் நடத்தியவர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ரஷியா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போரை நிறுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். காரணம், அமைதிக்கான நோபல் பரிசு என்றுகூட இருக்கலாம்.
இரு நாடுகளிடையேயான போர் நிறுத்த முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வந்தாலும், போர் என்னவோ நாளுக்குநாள் தீவிரமடைந்துகொண்டுதான் இருக்கிறது.
இதையும் படிக்க:என்ன ஆனது? எக்ஸ் தளத்தில் டிரெண்டாகும் `டிரம்ப் இஸ் டெட்’ பதிவுகள்!