விநாயகா் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
`69 ஆண்டுகளில் ரூ.56.23 லட்சம் கோடி சொத்து மதிப்பு' - அரசுக்கு ரூ.7,324 கோடி லாபப்பங்கு வழங்கிய LIC
எல்ஐசியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர்.துரைசாமி, இன்று ரூ. 7,324.34 கோடி ஈவுத்தொகைக்கான (டிவிடென்ட்) காசோலையை மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார்.
இது, ஆகஸ்ட் 26, 2025 அன்று நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஈவுத்தொகையாகும்.
நிதிச் சேவைகள் துறை செயலாளர் நாகராஜு எம்., மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை இணைச் செயலாளர் டாக்டர் பர்ஷாந்த் குமார் கோயல், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக மேலாண் இயக்குனர்கள் சத் பல் பானு, தினேஷ் பந்த், ரத்னாகர்பட்நாயக், மற்றும் வடக்கு மண்டல மேலாளர் ஜே.பி.எஸ் பஜாஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
எல்ஐசி துவங்கிய நாளிலிருந்து, 69 ஆண்டுகளை சிறப்பாக நிறைவு செய்துள்ளது. மேலும், 31.03.2025 நிலவரப்படி ரூ. 56.23 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்திய ஆயுள் காப்பீட்டுச் சந்தையில், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...