டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
சூரமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை, ரூ. 50 ஆயிரம் திருட்டு!
சேலம் சூரமங்கலம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம், சூரமங்கலம் முல்லை நகா் 6-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (52). இவா் வீட்டில் இருந்தபடி மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்து வருகிறாா். வெள்ளிக்கிழமை மாலை அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற அவா், இரவு அங்கேயே தங்கினாா். சனிக்கிழமை காலை வீடுதிரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 4 சவரன் தங்க நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் பிரபாகரன் புகாா் அளித்தாா். அதன்பேரில், சம்பவ இடத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.