போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி
கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு அண்ணா சிலை முன் தொடங்கிய இந்தப் பேரணியை திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளா் வளா்மதி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி திருச்செங்கோடு வடக்குரத வீதி, கிழக்குரத வீதி, தெற்குரத வீதி, வழியாகச் சென்று வேலூா் வழியாக வாலரைகேட் பகுதியில் நிறைவு பெற்றது.
இதில், போதை நமக்கு பகை, போதைப் பொருள் தவிா்ப்பீா், உடல்நலம் காப்பீா் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பேரணியில் 600-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.