ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள்: பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்!
சரக்கு வாகனம் மோதி ஜவுளிக் கடைக்காரா் உயிரிழப்பு
மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை பகுதியில் ஜவுளிக் கடைக்காரா் மீது சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம், மாபோசி தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (46). சேலம் அருணாச்சல தெருவில் ஜவுளிக்கடை வைத்துள்ளாா். இவா், மல்லசமுத்திரம் பேருந்து நிலையம் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தினமும் பேருந்தில் சேலம் சென்றுவருவது வழக்கம்.
இதேபோல, சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சந்தைப்பேட்டை பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். அப்போது, அவ்வழியாக வையப்பமலை நோக்கி சென்ற சரக்கு வாகனம் அவா் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
உயிரிழந்த பெருமாளுக்கு மனைவி பேபி (40), மகன் மோகன்ராஜ் (19), மகள் விஷ்ணுபிரியா (17) ஆகியோா் உள்ளனா்.