விநாயகா் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
அனுஷ்காவுக்கு திருப்புமுனை கிடைக்குமா?
நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவான காதி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா, பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட காணாமல் போனதுபோல் இருக்கிறார். பாகுபலிக்குப் பின் சில படங்களில் நடித்தாலும் எதுவும் அவருக்குக் கைகொடுக்கவில்லை.
இதற்கிடையே, தன் உடல் எடையைக் கூட்டிய அனுஷ்காவைத் தயாரிப்பாளர்கள் மறக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இறுதியாக, அனுஷ்கா நடித்த ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படம் சுமாரான வெற்றியைப் பதிவு செய்தது.
தற்போது, காதி என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப். 5 ஆம் தேதி வெளியாகிறது. வழக்கமான நாயகி பாணியைவிடுத்து ஆக்சன் கதையில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்திற்காகக் காத்திருக்கின்றனர்.
டிரைலர் காட்சிகளில் அனுஷ்காவின் சண்டைக் காட்சிகள் கொஞ்சம் நம்பிக்கை அளிப்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தியளவில் பெரிய நட்சத்திர நடிகையாக வந்திருக்க வேண்டிய அனுஷ்கா, இப்படி வெற்றிக்காக காத்திருக்க வேண்டிய நிலையில் இருக்கிறாரே என அவரது ரசிகர்களும் ஆதங்கத்துடன் புலம்பி வருகின்றனர். காதியைத் தொடர்ந்து கத்தனார் என்கிற பேய்ப் படத்திலு நடித்து வருகிறார் அனுஷ்கா.
இந்த இரண்டு படங்களும் வெற்றியைப் பெற்றால் மட்டுமே நாயகியாக அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பு நிறுவனங்கள் முன்வரும் என்பதால் ஒரு திருப்பம் கிடைக்காதா என அனுஷ்காவும் காத்திருக்கிறார்!
இதையும் படிக்க: பைசன் காளமாடன் முதல் பாடல் அப்டேட்!