வாக்கு திருட்டைக் கண்டித்து செப். 6, 13-ல் தொடா் முழக்கப் போராட்டம்
ஆசிய கோப்பையை புறக்கணித்த பாகிஸ்தான் தமிழ்நாட்டிற்கு வருகை!
பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பயணம் செய்யுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணி தமிழகத்திற்கு வரவிருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் நாட்டின் போர் பதற்றத்தினால் இரு நாடும் விளையாட்டு போட்டிகளில் விளையாடாமல் தவிர்த்து வருகின்றன.
இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை. அதேவேளையில், வெளிநாட்டில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்திற்கு பாகிஸ்தான் வருமென ஹாக்கி இந்தியாவின் செயலாளர் போலாநாத் சிங் உறுதிசெய்துள்ளார்.

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை வரும் டிசம்பரில் சென்னை, மதுரையில் நடைபெற இருக்கிறது.