உதய்பூரில் நிகழ்ந்த விபத்தில் பாஜக எம்எல்ஏ உள்பட இருவர் காயம்
திண்டுக்கல்: `விஜய் கூத்தாடி என்றால் உதயநிதியும் கூத்தாடி தான்!' - இயக்குநர் பேரரசு
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து இந்து முன்னணி சார்பில் 50 விநாயகர் சிலைகள் பேரணி செல்லும் நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை துவங்கி வைத்தார். பின் இயக்குனர் பேரரசு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, "விஜய் நடத்திய இரண்டு மாநாடும் வெற்றிதான். விஜய் அரசியல்வாதி ஆகிவிட்டார். அதனால், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறியுள்ளார்.
விஜய் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுவதால் சந்தோசம் அடைய வேண்டும். ஏனெனில் சிலர் சொல்வது கூட இல்லை. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்வதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பாரபட்சம் பார்க்கின்றனர். கிறிஸ்துமஸ், ரம்ஜான் வாழ்த்து கூறுகின்றனர். ஆனால் தீபாவளி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுவதில்லை. இந்து மதத்தின் மீது காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு இல்லை சிறுபான்மையினர் ஓட்டு வாங்குவதற்காக செய்கிறார்களா என்று தெரியவில்லை.

சாமி இல்லை என்பது தற்போது அரசியலாக மாறிவிட்டது. அரசியல், பொது வாழ்விற்கு வந்து விட்டார்கள் என்றால் அனைத்து மதத்தினருக்கும், சாதியினருக்கும் சமமானவர்கள். இந்துக்கள் ஓட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதிக்கும் இல்லை. காரணம் இந்துக்கள் இடையே ஒற்றுமை இல்லை. சிறுபான்மையினர் என்பது தவறான வார்த்தை. இங்கு அனைவரும் மக்கள்தான். அரசியல்வாதிகள் சிறுபான்மையினர் என்று கூறுவதே தவறு. அனைவரையும் மக்களாக பார்க்க வேண்டும். சிறுபான்மையினர் என்று கூறி சிறுமைப்படுத்த கூடாது என்பது எனது வேண்டுகோள்.

விஜய் கூத்தாடி என்றால் உதயநிதியும் கூத்தாடி தான்!
எம்ஜிஆர் போன்ற செல்வாக்கு மிகுந்த நடிகரை பார்க்க முடியாது. அவரையே கூத்தாடி என கூறினார்கள். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தவுடன் மலையாளி என கூறினார்கள். இன்று விஜயை கூத்தாடி எனக் கூறுகின்றனர். எம் ஜி ஆர் -யை கூத்தாடி என கூறியதால் அவர் இறங்கி போகவில்லை. தோற்றுப் போகவில்லை. சிவனும் கூத்தாடிதான் கூத்தாடி என்றால் அவமானமா உதயநிதியும் நடித்தார் அப்படி என்றால் அவரைக் கூத்தாடி என்று சொல்லலாமா? துணை முதலமைச்சராக உள்ளார் துணைக் கூத்தாடி என கூறலாமா? விஜய் கூத்தாடி என்றால் உதயநிதியும் கூத்தாடி தான் " என கூறினார்