செய்திகள் :

'விஜய்க்கு அறிவில்லை; வர்ற கோபத்துக்கு ஓங்கி குத்த வேண்டும்' - கடுமையாக விமர்சித்த நடிகர் ரஞ்சித்

post image

இந்து முன்னணி சார்பில் கோவை துடியலூர் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஞ்சித், “சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறோம். பொட்டு வைப்பதற்கு பிரச்னை, சாமி கும்பிடுவதற்கு பிரச்னை நிலவுகிறது.

நடிகர் ரஞ்சித்

நான் சங்கி தான்

என்னை சங்கி என்றும், சாதி வெறியன் என்றும் விமர்சிக்கிறார்கள். கலாசாரத்திற்காக என்னை அப்படி சொன்னால் நான் சங்கி தான்.” என்றவர் தவெக தலைவர் விஜய் குறித்து ஒருமையில் கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய நடிகர் ரஞ்சித், “விஜய் மதுரை மாநாட்டில் சொடக்கு போட்டு பிரதமரை குறிப்பிட்டு பேசுகிறார். 2014-ம் ஆண்டு கோவையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக பூனை குட்டி போல கையை கட்டி அமர்ந்திருந்ததை தம்பி மறந்துவிட்டார் போல.

ரஞ்சித்

இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் என்று பிரதமரை விமர்சிக்கும் விஜய், அன்று எந்த மக்கள் பிரச்னைக்காக மோடியை சந்தித்தார். அவரின் ‘தலைவா’ படம் ரிலீஸ் பிரச்னைக்காக தான் காத்திருந்தார்.

பிரதமரை ‘மிஸ்டர்’ என குறிப்பிடுகிறார். முதலமைச்சரை ‘அங்கிள்’ என்று பேசுகிறார். அவரின் மூளையில் ஏதோ பிரச்னை இருக்கிறது. உங்களுக்கு அறிவில்லையா. இதுதான் அரசியல் நாகரீகமா. உலகமே வியந்து பார்க்கும் பிரதமராக மோடி இருக்கிறார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

அரசியலில் நல்லவர்களை சல்லடை போட்டு தேடும் நிலை  உள்ளது. எனக்கும் வர கோபத்துக்கு ஓங்கி குத்த வேண்டும் போல் இருக்கிறது. அதை வாக்கால் குத்தி வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.” என்றார்.

 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``நான் எழுதிக் கொடுத்தைப் பேசுபவனல்ல" - மரம் மாநாட்டில் சீமான் கிண்டல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:"மாநாடு நடத்த இந்தக் காட... மேலும் பார்க்க

Seeman: ``100 மரம் நட்டால் சான்றிதழ்; 1000 மரம் நட்டால் அரசு மரியாதை!'' -சீமானின் 10 அம்ச திட்டங்கள்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் திருத்தணியில் மரங்கள் மாநாட்டை நடத்தியுள்ளார். இயற்கை வளங்களின் முக்கியத்துவம் பற்றி பேசிய சீமான், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என சில... மேலும் பார்க்க

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி; உயரும் விலைவாசிகள் - என்ன தான் காரணம்?

வரலாறு காணாத அளவுக்கு நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு கிட்டத்தட்ட ரூ.88 ஆக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி எதனால்... அடுத்து என்ன ஆகும் என... மேலும் பார்க்க

மராத்தா போராட்டத்தால் ஸ்தம்பித்த மும்பை - `கடைசி யுத்தம்’ என கூறும் மனோஜ் ஜராங்கே!

மராத்தா சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார். அவர்களின் கோரிக்கையில் குறிப்பிட்ட பகுதியை மாநில அரசு ஏற்கனவ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `விஜய் கூத்தாடி என்றால் உதயநிதியும் கூத்தாடி தான்!' - இயக்குநர் பேரரசு

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து இந்து முன்னணி சார்பில் 50 விநாயகர் சிலைகள் பேரணி செல்லும் நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை துவங்கி வைத்தார்... மேலும் பார்க்க