செய்திகள் :

``நான் எழுதிக் கொடுத்தைப் பேசுபவனல்ல" - மரம் மாநாட்டில் சீமான் கிண்டல்

post image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:

"மாநாடு நடத்த இந்தக் காட்டிற்குள் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை.

அணில்களுக்கும் சேர்த்துதான் காடு வளர்க்க நாம் பாடுபடுகிறோம். மரங்களுக்கு என்ன மாநாடு, அவர்களுக்கு என்ன மறை கழன்றுவிட்டதா என்று சிலர் கேட்பார்கள். மறை கழன்றதால் அல்ல; மறையைக் கற்றதால் இந்த மாநாடு நடத்துகிறோம்."

சீமான்
சீமான்

நாட்டிற்காக நிற்பவர்கள் தான் இந்த மாநாட்டை நடத்த முடியும். அற்ப ஓட்டிற்காக நிற்பவர்கள் இதைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள். அரசு, “மரம் நடுவோம், மழை பெறுவோம்” என்ற வாசகத்துடன் தங்கள் பொறுப்பு முடிந்துவிடுவதாக நினைக்கிறது.

எது சேவை அரசியல், எது அரசியல் என்பதை உணர்ந்து செயலில் ஈடுபடுபவர்கள் தான் இந்த வேலையை செய்வார்கள். செய்திகளுக்காக அரசியல் செய்வோர் இந்த வேலையை செய்ய மாட்டார்கள். கட்சி அரசியல், தேர்தல் அரசியல் செய்வோர் இந்த வேலையை செய்ய மாட்டார்கள்.

செல்வம் என்றால் என்ன?

மக்களுக்கான அரசியல் செய்பவன் தான் இந்தப் பணிகளை செய்வான். அப்படித்தான் மாநாடுகளின் மாநாடு, மரங்களுக்கான மாநாடு நடத்தப்படுகிறது. அடுத்து மலைகளின் மாநாடு, தண்ணீர் மாநாடு நடைபெறும்.

செல்வம் என்றால் என்ன? காடுதான் செல்வம். கடல், மலை, மணல் இதுதான் செல்வம். காந்தி படம் மட்டுமே செல்வம் அல்ல; அது வெறும் தாள்.

அந்தத் தாளைத் தந்தவனே மரம்தான். இவன்தான் நம் செல்வம். ஒரு மாநில அரசு நிதிநிலை அறிக்கையில் தூய காற்றிற்காக ரூ. 4,500 கோடி ஒதுக்கியுள்ளது.

சீமான்
சீமான்

தூய்மையான காற்றை எந்த நாட்டில் வாங்க முடியும்? அதை எப்படி நம் குடிமக்களுக்கு விநியோகம் செய்வார்கள்?

மழைநீரைச் சேமிக்காமல், அதை கடல் நீரில் கலக்கி விட்டு, பிறகு அதைச் சுத்திகரிக்கிறோம் என்று சொல்லி ரூ. 50,000 கோடி சம்பாதிக்கும் அரசாக இருக்கிறது.

தண்ணீரைப் போல காற்றையும் விற்பார்கள். நான் எழுதிக் கொடுத்ததைப் பேசுபவனல்ல.

சத்தியமாக நானேதான் பேசுகிறேன். இந்த பூமிக்கு நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதுதான் திரும்பவும் நமக்கு கிடைக்கும் என்பதை மட்டும் மறவாதீர்கள்," என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஒரே வீட்டில் 947 Voters - Thanos -க்கு Voter ID? - RTI கேள்விக்கு பதிலளிக்காத ECI | Imperfect Show

* இந்தியாவில் ஜப்பான் 6 லட்சம் கோடி முதலீடு?* உலக பொருளாதாரம் உறுதி தன்மைக்கு சீனா- இந்தியா இணைந்து பணியாற்றுவது அவசியம்? - மோடி * மோடியால் ஜப்பானில் பாதுகாப்பாக இருக்கிறோம் - கருத்து சொன்ன பெண்* அதிப... மேலும் பார்க்க

EPS-க்காக, Annamalai சபதம், DMDK-உடன் கே.என் நேரு டீல்! | Elangovan Explains

ஜி.கே மூப்பனார் நினைவு நாளில், எடப்பாடியிடம் கூடுதல் அன்பை பகிர்ந்த அண்ணாமலை. அவருக்கு ஒரு சத்தியமும் செய்து தந்திருக்கிறார் என தகவல். கூட்டணிக் கட்சிகளை தக்க வைக்க எ.வ வேலுவிடமும், புதிய கட்சிகளை கூட... மேலும் பார்க்க

Seeman: ``100 மரம் நட்டால் சான்றிதழ்; 1000 மரம் நட்டால் அரசு மரியாதை!'' -சீமானின் 10 அம்ச திட்டங்கள்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் திருத்தணியில் மரங்கள் மாநாட்டை நடத்தியுள்ளார். இயற்கை வளங்களின் முக்கியத்துவம் பற்றி பேசிய சீமான், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என சில... மேலும் பார்க்க

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி; உயரும் விலைவாசிகள் - என்ன தான் காரணம்?

வரலாறு காணாத அளவுக்கு நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு கிட்டத்தட்ட ரூ.88 ஆக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி எதனால்... அடுத்து என்ன ஆகும் என... மேலும் பார்க்க

மராத்தா போராட்டத்தால் ஸ்தம்பித்த மும்பை - `கடைசி யுத்தம்’ என கூறும் மனோஜ் ஜராங்கே!

மராத்தா சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார். அவர்களின் கோரிக்கையில் குறிப்பிட்ட பகுதியை மாநில அரசு ஏற்கனவ... மேலும் பார்க்க